/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : பிப் 20, 2025 01:38 AM
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இது, தமிழகத்தில் அதிகளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தரச்சான்றிதழ் பெற்றது. இந்நிலையில், சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேட்டால், ஆலை மூடும் நிலைக்கு தள்ளிய, அதிகாரிகளை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, ஊழியர்கள் கூறுகையில், 'நாளொன்றுக்கு, 2,000 டன் அரவை திறன் கொண்ட பாலக்கோடு சர்க்கரை ஆலையில், தற்போது வெறும், 600 டன் வரை மட்டும் கரும்பு அரவை செய்யப்படுகிறது. மேலும், 2 நாட்களுக்கு ஒரு முறை ஆலையை அவ்வப்போது அவர்கள் விருப்பம் போல், நிறுத்தி இயக்கி வருகின்றனர். ஆலை நிர்வாகத்திலுள்ள அலுவலர்கள் விவசாயிகளிடம் சென்று சர்க்கரை ஆலைக்கு, கரும்பை பதிவு செய்யாமல், சர்க்கரை ஆலையில் இயங்கும், பள்ளி நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர். இதனால், கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நடப்பாண்டில் குறைந்த அளவில் கரும்பு பதிவானது. மற்றவை தனியார் ஆலை களுக்கு சென்று விட்டது. அடுத்தாண்டு சர்க்கரை ஆலை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், ஆலையை நம்பியுள்ள ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடி உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.