/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கழிவுநீர் கால்வாய் அமைக்க எடுத்த குழிவெளியே வர அவதிப்படும் பொதுமக்கள்

ADDED : மார் 03, 2025 01:40 AM
கழிவுநீர் கால்வாய் அமைக்க எடுத்த குழிவெளியே வர அவதிப்படும் பொதுமக்கள்
பாப்பிரெட்டிப்பட்டி: --பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.துரிஞ்சிப்பட்டியில், கழிவுநீர் கால்வாய் அமைக்க எடுத்த குழியால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சியில், 15 கிராமங்கள் உள்ளன. இதில் பி.துரிஞ்சிப்பட்டி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் பஸ் நிறுத்தம் முதல், வடசந்தையூர் வரை செல்லும் சாலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த, 3 மாதங்களுக்கு முன் தொடங்கியது.
இதற்காக சாலையோரம் வீடுகளுக்கு முன் குழி தோண்டப்பட்டு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வந்தது. இப்பணி திடீரென்று நிறுத்தப்பட்டு, 3 மாதங்களை கடந்தும், பணி நடக்கவில்லை. இதனால் சாலையோர வீடுகளில் குடியிருக்கும் மக்கள், வீட்டிலிருந்து வெளியே வர மிகவும் சிரமப்படுகின்றனர்.
குழந்தைகள், வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். வாசலில் மரப்பலகை வைத்து சென்று வரும் அவல நிலை உள்ளது. வயதானவர்கள் கால்வாயில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.
இது குறித்து, பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, விரைந்து கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். இல்லையெனில் கால்வாய் அமைக்க எடுத்த குழிகளை மூட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.