தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அனுமதியின்றி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி இயக்கிய வாகனங்கள் பறிமுதல்


ADDED : ஆக 30, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு, ஆக. 30-

பாலக்கோடு பகுதியில் தொடர் விபத்தை தடுக்க, முறையாக சாலை வரி செலுத்தாத மற்றும் உரிமம் பெறாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். அதன்படி, தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வழிகாட்டுதலின் படி, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, சோமனஹள்ளி நெடுஞ்சாலை முதல் காடுசெட்டிப்பட்டி வரை வாகன சோதனை மேற்கொண்டார்.

அப்போது கர்த்தாரப்பட்டி டேல்கேட் அருகே, அவ்வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது, சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட, 2 பொக்லைன் வாகனத்திற்கு தலா, 30,000 வீதம், 60,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலை வரி செலுத்தாமல், தகுதி சான்று பெறாமல் இயக்கப்பட்ட, 2 சரக்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடமிருந்தது தலா, 20,000 ரூபாய் என மொத்தம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us