/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 04, 2024 01:10 AM
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 4-----
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியின், போதை பொருள் தடுப்பு குழு, அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இணைந்து, பாப்பிரெட்டிப்பட்டி நகரத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இதை கல்லுாரி முதல்வர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பாப்பிரெட்டிப்பட்டி நகரத்தின் பஸ் ஸ்டாண்ட், 4 ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக, போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. போதை பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் கடும் விளைவுகளை பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மது விலக்கு இன்ஸ்பெக்டர் வசந்தா, போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் ஜெயராமன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.