/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்
/
பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்
பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்
பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்
ADDED : ஜன 17, 2025 01:21 AM
பொங்கல் கரிநாள் கொண்டாட்டம்டாஸ்மாக்கில் குவிந்த மது பிரியர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி,:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பொங்கல் பண்டிகை கடந்த, 4 நாட்களாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டு நேற்று, காலை திறக்கபட்டன. பொங்கல் கரிநாளை கொண்டாட, குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். டாஸ்மாக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த, இரும்பு தடுப்புகள் அமைத்து வரிசையில் அனுப்பப்பட்டனர்.
வெங்கடசமுத்திரம், சமத்துவபுரம், துரிஞ்சிப்பட்டி கடத்துார், தென்கரைக்கோட்டை மற்றும் மாவட்டம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளில், குடிமகன்கள் குவிந்தனர். இதை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* அரூர் டாஸ்மாக் கடையில், மது வாங்க குடிமகன்கள் நேற்று காலை, 11:00 மணி முதலே வரத்துவங்கினர். இதனால், டாஸ்மாக் கடை முன், கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை விட, 3 மடங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், பலமணி நேரம் காத்திருந்து, மதுபாட்டில்களை வாங்கியதாக குடிமகன்கள் தெரிவித்தனர்.