/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
/
தனியார் பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
தனியார் பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
தனியார் பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
ADDED : ஜன 18, 2025 01:22 AM
தனியார் பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
அரூர், :தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சின்னாங்குப்பத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும், சின்னாங்குப்பம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ,-மாணவியர், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சேலம், அரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு சின்னாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில், சேலம்-அரூர் செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அரூரில் இருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்கள் மற்றும் சேலத்தில் இருந்து அரூர் வரும் தனியார் பஸ்கள் சின்னாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. இதை கண்டித்து, நேற்று காலை, 11:30 மணிக்கு, அரூர்-சேலம் சாலையில், சின்னாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சின்னாங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 1:30 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.