/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் வசதி செய்து தரக்கோரிபி.டி.ஓ., ஆபீசில் மக்கள் மனு
/
குடிநீர் வசதி செய்து தரக்கோரிபி.டி.ஓ., ஆபீசில் மக்கள் மனு
குடிநீர் வசதி செய்து தரக்கோரிபி.டி.ஓ., ஆபீசில் மக்கள் மனு
குடிநீர் வசதி செய்து தரக்கோரிபி.டி.ஓ., ஆபீசில் மக்கள் மனு
ADDED : பிப் 14, 2025 01:37 AM
குடிநீர் வசதி செய்து தரக்கோரிபி.டி.ஓ., ஆபீசில் மக்கள் மனு
அரூர்: குடிநீர் வழங்க கேட்டு, வாதாப்பட்டி கிராம மக்கள், அரூர் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொங்கவேம்பு பஞ்.,க்கு உட்பட்ட வாதாப்பட்டி முனியன்கொட்டாயில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு செட்டிக்குட்டையில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த, ஓராண்டுக்கு முன், சாலை அமைக்கும் பணியின் போது, பைப்லைன் சேதமடைந்தது. அப்போதிலிருந்து குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் அருகிலுள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று, தண்ணீர் எடுத்து வருவதால், அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, கிராம மக்கள் பலமுறை பஞ்., நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள், குடிநீர் வசதி செய்யாமல் மெத்தனம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று, பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்த, கிராம மக்கள், குடிநீர் வசதி செய்து தரக்கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.