/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்கள் குறை தீர்க்கும் முகாமில்மனு எழுதி கொடுத்த மாணவியர்
/
மக்கள் குறை தீர்க்கும் முகாமில்மனு எழுதி கொடுத்த மாணவியர்
மக்கள் குறை தீர்க்கும் முகாமில்மனு எழுதி கொடுத்த மாணவியர்
மக்கள் குறை தீர்க்கும் முகாமில்மனு எழுதி கொடுத்த மாணவியர்
ADDED : பிப் 18, 2025 12:46 AM
மக்கள் குறை தீர்க்கும் முகாமில்மனு எழுதி கொடுத்த மாணவியர்
சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடந்தது.மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்லுாரி மாணவியர், மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுத்தனர்.கலெக்டர் அலுவலகம் அருகே, சிலர் பொது மக்களிடம் மனுக்களை பெற்று எழுதி தர, அதிக கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு குற்றச்சாட்டு வந்தது. இந்நிலையில் த.வெ.க., மாவட்ட செயலர் பார்த்திபன் தலைமையில், நிர்வாகிகள் சிலர் நாற்காலி உள்ளிட்ட பொருட்களுடன் கலெக்டர் அலுவலகம் அருகே, பொது மக்களுக்கு இலவசமாக மனு எழுதி தர முயன்றனர்.
பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களிடம் சென்று பொது மக்களுக்கு இலவசமாக மனு எழுதி தர, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் செல்லலாம் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சென்றனர்.