/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்
/
அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்
அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்
அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்
ADDED : பிப் 21, 2025 12:46 AM
அரசு பஸ்களில் அரூர் பயணிகளைஏற்றி செல்ல மறுப்பதாக புகார்
அரூர்: சேலத்தில் இருந்து, அரூர் வழியாக, இயக்கப்படும் அரசு பஸ்களில், தங்களை ஏற்றுவதற்கு ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுப்பதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சேலத்தில் இருந்து, அரூர் வழியாக,  வேலுார், சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரவு நேரத்தில்,  அரூர்  வழியாக, செல்லும் அரசு பஸ்களில், அரூர் செல்லும் பயணிகளை ஏற்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மறுப்பு தெரிவிக்கின்றனர். காலியான  இருக்கைகளுடன் பஸ்கள் சென்றாலும் கூட, அரூர் பயணிகளை ஏற்றுவதில்லை. மேலும், அரூர் பஸ் ஸ்டாண்ட் வராமல், பைபாஸ் சாலை வழியாக பஸ்கள் சென்று விடுகின்றன. இதனால், இரவில் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர், மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சேலத்தில் இருந்து அரூர் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களில், அரூர் பயணிகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.