/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.சி., - எஸ்.டி., தொழில் முனைவோர் கருத்தரங்கு
/
எஸ்.சி., - எஸ்.டி., தொழில் முனைவோர் கருத்தரங்கு
ADDED : பிப் 23, 2025 01:55 AM
எஸ்.சி., - எஸ்.டி., தொழில் முனைவோர் கருத்தரங்கு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு சார்பாக, மாவட்ட தொழில் மையத்தில் கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., தொழில் முனைவோர்களுக்கு தொழில் முதலீட்டு வாய்ப்புகள், தொழில் வளர்ச்சிகள், மத்திய, மாநில அரசுகளின் தொழில் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்ளில் உள்ள தொழில் வாய்ப்புகள், உலகளாவிய தொழில் வாய்ப்புகள், எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து, விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மாவட்ட தொழில் வழிகாட்டி கிருஷ்ணன், தர்மபுரி மாவட்ட தலைவர் ஆனந்தசெல்வம், ஆக்டிவ் நெட்வொர்க் தலைவர் தமிழ்பிரியன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மகேந்திரன், தர்மபுரி வட்டார ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் உட்பட, 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.