/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவராத்திரிக்கு கங்கை நீர்போஸ்ட் ஆபீசில் பெறும் வசதி
/
சிவராத்திரிக்கு கங்கை நீர்போஸ்ட் ஆபீசில் பெறும் வசதி
சிவராத்திரிக்கு கங்கை நீர்போஸ்ட் ஆபீசில் பெறும் வசதி
சிவராத்திரிக்கு கங்கை நீர்போஸ்ட் ஆபீசில் பெறும் வசதி
ADDED : பிப் 26, 2025 01:17 AM
சிவராத்திரிக்கு கங்கை நீர்போஸ்ட் ஆபீசில் பெறும் வசதி
தர்மபுரி:தர்மபுரி தலைமை போஸ்ட் ஆபீசில், ரிஷிகேஷ், கங்கோத்ரி ஆகிய இடங்களில் இருந்து, கங்கை நதியின் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஹிந்து மக்கள் புனிதமாக போற்றும், கங்கை நிதியின் புனித நீரை, பார்சல் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை, இந்திய தபால்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷிலிருந்து, கங்கை நீரை, 250 மி.லி., கொள்ளளவு பாட்டிலில் நிரப்பி, போஸ்ட் ஆபீஸ்களில், 30 ரூபாய் என விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் கங்கை நீரை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம் என, போஸ்ட் ஆபீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.