/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலியல் துன்புறுத்தல் வி.சி., நிர்வாகி கைது
/
பாலியல் துன்புறுத்தல் வி.சி., நிர்வாகி கைது
ADDED : மார் 02, 2025 01:21 AM
பாலியல் துன்புறுத்தல் வி.சி., நிர்வாகி கைது
பாப்பிரெட்டிப்பட்டி:பாலியல் துன்புறுத்தல் கொடுத்த, வி.சி.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தனியார் நுால் மில் இயங்கி வருகிறது. இங்கு பட்டுகோணம்பட்டியை சேர்ந்த ஞானசேகரன், 52, தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். வி.சி., தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். இவர், மில்லில் பணிபுரியும் பெண் ஒருவரிடம், பாலியல் தொடர்பான கோரிக்கையை அடிக்கடி வைத்துள்ளார். இதனால், அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்.,9 காலை மில் கேட் முன், அப்பெண் நின்றிருந்தார். அப்போது ஞானசேகரன், பெண்ணிடம் ஆதார் கார்டு கொடு என்று கேட்டு தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். புகார்படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கடந்த, 19ல் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம்
ஞானசேகரனை கைது செய்தனர்.