/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சூறைக்காற்றில்துாக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் கூரை
/
சூறைக்காற்றில்துாக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் கூரை
சூறைக்காற்றில்துாக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் கூரை
சூறைக்காற்றில்துாக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் கூரை
ADDED : மார் 14, 2025 01:49 AM
சூறைக்காற்றில்துாக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் கூரை
கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த, கே.ஈச்சம்பாடியில், உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியின், 6 முதல், 8ம் வகுப்பு கட்டடங்களின் கூரை சீரமைக்கப்பட்டு, இரும்பு தகடுகளான ஷீட்கள் பொருத்தப்பட்டன. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு கே.ஈச்சம்பாடியில் சூறை காற்றுடன் பெய்த மழையால், பள்ளி கூரையில் இருந்த ஷீட்கள் துாக்கி வீசப்பட்டன. அதிஷ்டவசமாக பள்ளி முடிந்து மாணவர்கள் சென்று விட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சேதமடைந்த பள்ளி கட்டடத்தை, நேற்று மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா, காரிமங்கலம் தாசில்தார் கோவிந்தராஜ், கம்பைநல்லுார் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். தற்காலிகமாக, மாணவர்கள்
வேறு கட்டடத்தில் அமர வைக்கப்பட்டு வகுப்பு நடக்கிறது.