/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு
/
வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு
வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு
வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு
ADDED : மார் 21, 2025 01:13 AM
வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு
தர்மபுரி:மாணவ, மாணவிகளிடையே காப்பீடு தொடர்பான, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எச்.டி.எப்.சி., எர்கோ காப்பீடு நிறுவனம் சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில், 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கு பெற்ற ஜூனியர் வினாடி - வினா போட்டிகள் சென்னையில் நடந்தன.
இதில், ஆரம்ப சுற்று, கடந்த மாதம் இறுதியிலும், மண்டல சுற்று, மார்ச் முதல் வாரத்திலும், ஆன்லைன் மூலம் நடந்தது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 532 குழுக்கள் பங்கேற்ற போட்டியில் தேர்ச்சியடைந்த, 8 குழுக்களுக்கு சென்னையில் இறுதிக்கட்ட போட்டிகள் நடந்தன.
இதில், தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் தனுஸ்ரீ, ரச்சிதா ஆகியோர், 2ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவியருக்கு கேடயம் மற்றும், 90,000 ரூபாய்க்கான காசோலை பரிசாக வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம், தர்மபுரி சி.இ.ஓ., ஜோதி சந்திரா வெற்றி பெற்ற மாணவியர் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பாராட்டினார்.