/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பரிசலில் மீன் பிடிக்கும் போது ஆற்றில் விழுந்த பெண் சாவு
/
பரிசலில் மீன் பிடிக்கும் போது ஆற்றில் விழுந்த பெண் சாவு
பரிசலில் மீன் பிடிக்கும் போது ஆற்றில் விழுந்த பெண் சாவு
பரிசலில் மீன் பிடிக்கும் போது ஆற்றில் விழுந்த பெண் சாவு
ADDED : ஏப் 01, 2025 01:37 AM
பரிசலில் மீன் பிடிக்கும் போது ஆற்றில் விழுந்த பெண் சாவு
ஏரியூர்:ஏரியூர் அருகே, காவிரியாற்றில் மீன் பிடிக்கும் போது, பரிசலில் இருந்து தவறி, ஆற்றில் விழுந்த பெண், கணவன் கண்ணெதிரே பலியானார்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள பத்திரஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊத்துப்பள்ளத்துாரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி லட்சுமி, 40. இருவரும் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலையில், மேட்டூர் காவிரி நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அங்கு, தங்கராஜ் பரிசலை இயக்க, அவரது மனைவி லட்சுமி, வலையில் மீனை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, வலையை இழுக்கும்போது, நிலைத்தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற தங்கராஜ் முயன்றும் வலையில் சிக்கியதால், லட்சுமியை காப்பாற்ற முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் அவரை சடலமாக மீட்டனர். ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.