/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொபட் மீது தனியார் பள்ளி பஸ் மோதல் 2 மாணவர்கள் படுகாயம்; சாலை மறியல்

ADDED : பிப் 02, 2025 01:27 AM
மொபட் மீது தனியார் பள்ளி பஸ் மோதல் 2 மாணவர்கள் படுகாயம்; சாலை மறியல்
பாப்பிரெட்டிப்பட்டி :தர்மபுரி மாவட்டம் கடத்துார் அடுத்த தின்னப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் நிதீஷ்குமார், 14; இவர் ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் வடிவேல் மகன் அபிலாஷ், 10. இவர், தின்னப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் நேற்று காலை, 7:30 மணியளவில் டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில், கடைக்கு செல்ல தின்னப்பட்டியில் இருந்து ஒடசல்பட்டி கூட்ரோடுக்கு வந்தனர்.
மாணவன் நிதீஷ்குமார் மொபட்டை ஓட்டி சென்றார். பின்பு மீண்டும் தின்னப்பட்டி செல்ல, கடத்துார் சாலையில் இருந்து தர்மபுரி -- அரூர் சாலையை கடந்தனர். அப்போது, தர்மபுரியில் இருந்து மொரப்பூர் நோக்கி வந்த தனியார் பள்ளி பஸ், நிதீஷ்குமார் சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிதீஷ்குமார், அபிலாஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தனியார் பள்ளி பஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், அப்பகுதியில் வேகத்தடை, பேரிகார்டு அமைக்கக் கேட்டும், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், தர்மபுரி டி.எஸ்.பி., சரவணன், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், கடத்துார் இன்ஸ்பெக்டர் சுகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.