/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாவட்ட கிரிக்கெட் அணிதேர்வில் பங்கேற்க அழைப்பு
/
மாவட்ட கிரிக்கெட் அணிதேர்வில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 24, 2025 01:17 AM
தர்மபுரி, :மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி அணியில் சேர விருப்பம் உள்ளவர்கள், தேர்வு போட்டியில் பங்கேற்கலாம் என, தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும், மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான, கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் பிப்., இறுதியில் நடக்கவுள்ளது. இதில், 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேர்வு போட்டிகள் நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளும், தர்மபுரி மாவட்ட அணியை தேர்வு செய்யும் தேர்வு முகாம், நாளை மறுநாள் காலை, 9:00 மணிக்கு, தர்மபுரி அடுத்த சவுளூர் கமலம் இன்டர் நேஷனல் பள்ளியிலுள்ள, தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க வலைப்பயிற்சி மையத்தில் நடக்கவுள்ளது.
இதில் பங்கேற்க, தர்மபுரி வருவாய் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தேர்வு போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள், பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டு வரவேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு, 94870 - 15007 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

