/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் கடும் குளிர்: வெறிச்சோடிய நீச்சல் குளம்
/
தர்மபுரியில் கடும் குளிர்: வெறிச்சோடிய நீச்சல் குளம்
தர்மபுரியில் கடும் குளிர்: வெறிச்சோடிய நீச்சல் குளம்
தர்மபுரியில் கடும் குளிர்: வெறிச்சோடிய நீச்சல் குளம்
ADDED : ஜன 25, 2025 01:51 AM
தர்மபுரியில் கடும் குளிர்: வெறிச்சோடிய நீச்சல் குளம்
தர்மபுரி,: தர்மபுரியில் ஏற்பட்டுள்ள கடும் குளிரால், செந்தில்நகரில் உள்ள நீச்சல் குளம் குளிக்க ஆளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.தர்மபுரி அடுத்த செந்தில்நகரில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ராஜாஜி நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கோடைகாலத்தில் மூன்று கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்புகளும் இதில் நடத்தப்படும்.
நீச்சல் குளத்தில் குளிக்க, ஒரு மணிநேரத்திற்க்கு, 50 ரூபாய் மற்றும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 59 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நீச்சல் கற்று பயனடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், இரண்டு வாரங்களாக, முன்பு இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த நீச்சல் குளத்தில் குளிக்க மக்கள் யாரும் வராத நிலையில்
இது வெறிச்சோடி காணப்படுகிறது.