ADDED : ஜன 30, 2025 01:29 AM
தர்மபுரி :தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம், 44. இவர் கடந்த, 20 ஆண்டுகளாக சமூக நலன் சார்ந்த பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறார். மருத்துவம், கல்வி சுற்றுச்சூழல், விவசாயம், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை முன்னெடுக்க, ஆதி பவுண்டேஷன் அறக்கட்டளையை கடந்த, 26 அன்று தர்மபுரியில் தொடங்கினார். பென்னாகரம், பா.ம.க., எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி ஆதி பவுண்டேஷன் லோகோவை வெளியிட்டார். குடியுரிமை மக்கள் இயக்க தலைவர் மகேந்திரன், தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பேசினர்.
இதில், டி.என்.சி., குழும தலைவர் மணிவண்ணன், எஸ்.எஸ்.எஸ்., ஜூவல்லரி சக்திவேல், டி.என்.சி., சிட்ஸ் நிர்வாக இயக்குனர் விவேகானந்தன், தே.மு.தி.க., கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மருத்துவர் அசோக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து
வழங்கினார்.

