/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
/
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ADDED : ஜன 30, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
மாரண்டஹள்ளி:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சீனிவாசனுக்கு கிடைத்த தகவலின்படி, திருமல்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து
சென்றார். அப்போது, நடுசீங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, 39, அவரது வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்ததில், உரிமம் பெறாத நாட்டு துப்பாக்கி மூலம், இரவு நேரங்களில் முயல் வேட்டைக்கு சென்று வந்ததை ஒப்பு கொண்டார். அதை தொடர்ந்து, ராஜாவை கைது செய்து, அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.