/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : பிப் 02, 2025 01:27 AM
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கடத்துார் :கடத்துார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், போதை பொருள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரி முதல்வர் வேதபாக்கியம் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சுகுமார் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி கல்லுாரியில் துவங்கி, மின்வாரிய அலுவலகம், அரசு மருத்துவமனை வழியாக, பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. இதில் மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேட்டு, கிருஷ்ணன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.