/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக்பள்ளியில் ரத்த தான முகாம்
/
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக்பள்ளியில் ரத்த தான முகாம்
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக்பள்ளியில் ரத்த தான முகாம்
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக்பள்ளியில் ரத்த தான முகாம்
ADDED : பிப் 21, 2025 12:45 AM
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக்பள்ளியில் ரத்த தான முகாம்
அரூர்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரிலுள்ள ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ரத்த தான முகாம் நடந்தது. கம்பைநல்லுார் லயன்ஸ் கிளப், காரிமங்கலம் வள்ளல் காரி லயன்ஸ் கிளப், ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
இதில், கலந்து கொண்டவர்களிடமிருந்து, 75 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவர், உதவி பேராசிரியரான சுகன்யா மற்றும் மருத்துவர் குழுவினர், முகாமில் பெறப்பட்ட ரத்தத்தை சேகரித்தனர். முகாமை, கம்பைநல்லுார் அரிமா சங்க தலைவர் வேடியப்பன் தொடக்கி வைத்தார். மண்டல தலைவர் பெரியசாமி, காரிமங்கலம் வள்ளல் காரி லயன்ஸ் கிளப் தலைவர் மதிவாணன், ஸ்ரீராம் பள்ளி நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி மற்றும் கம்பைநல்லுார், காரிமங்கலம் அரிமா சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.