/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜாக்டோ - ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஜாக்டோ - ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 26, 2025 01:16 AM
ஜாக்டோ - ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் சுருளிநாதன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் கவுரன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் பாஸ்கரன், தமிழக தமிழாசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் ராசாஆனந்தன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாநில பொதுச்செயலாளர் காமராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார்.இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு, தமிழக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், ஜாக்டோ - ஜியோவை சேர்ந்த, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.