/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆடு மேய்க்கும் பெண்ணின் கவிதை நுால் வெளியீடு
/
ஆடு மேய்க்கும் பெண்ணின் கவிதை நுால் வெளியீடு
ADDED : மார் 03, 2025 01:40 AM
ஆடு மேய்க்கும் பெண்ணின் கவிதை நுால் வெளியீடு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே, கொம்பாடியூரை சேர்ந்தவர் அமுதா, 45. இவர் அங்குள்ள மலைப்பகுதியில் ஆடு மேய்க்கும் விவசாய கூலித்தொழிலாளி. சிறு வயதிலிருந்தே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவர். ஏழ்மை காரணமாக அவரின் படைப்புகளை நுாலாக்க
முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த, 30 ஆண்டுகளாக சேர்த்து வைத்த கவிதைகளை தொகுத்து, சகாப்தம் பதிப்பகத்தின் மூலம், 'நிலவை தேடும் காடு' என்ற தலைப்பில் நுாலாக்கம் செய்தார். இந்த கவிதை நுாலை தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள்,
கல்வியாளர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.