/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடத்துாரில் குடிநீர் தட்டுப்பாடுபேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
/
கடத்துாரில் குடிநீர் தட்டுப்பாடுபேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
கடத்துாரில் குடிநீர் தட்டுப்பாடுபேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
கடத்துாரில் குடிநீர் தட்டுப்பாடுபேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
ADDED : மார் 06, 2025 01:20 AM
கடத்துாரில் குடிநீர் தட்டுப்பாடுபேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி:---தர்மபுரி மாவட்டம், கடத்துார் பேரூராட்சியில், ரத்தினம் பிள்ளை தெரு, அரூர் மெயின் ரோடு, மடதள்ளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், 20 நாட்களுக்கு, ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், 15வது வார்டு கவுன்சிலர் மயில்சாமி, 'கடந்த ஓராண்டு முன் அமைத்த குடிநீர் குழாயில், இதுவரை குடிநீர் வினியோகம் செய்யவில்லை. சுழற்சி முறையில் வழங்கப்படுவதால், பொதுமக்கள் கடும் குடிநீரின்றி அவதிப்படுவதாகவும், அடிப்படை வசதிகள் இல்லை, பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை' என தெரிவித்திருந்தார்.
இது குறித்து நேற்று, நம், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி, படம் வெளியானது.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவின் படி, நேற்று மதியம் பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ் கடத்துார் பேரூராட்சி, 15வது வார்டில் ஆய்வு செய்து, குடிநீர் தட்டுப்பாடு குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். மக்களும், பேரூராட்சியின் மெத்தனப்போக்கை சுட்டிக்காட்டினர்.
மக்களின அனைத்து அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என உதவி இயக்குனர் கணேஷ் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர், பேரூராட்சி தலைவர் மணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.