/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா
/
அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா
ADDED : மார் 06, 2025 01:20 AM
அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா
பாப்பிரெட்டிப்பட்டி:-பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரியில், தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது. முதல்வர் ரவி தலைமை வகித்தார்.
தமிழ்துறை பேராசிரியர் சித்திரைச்செல்வி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சுரேஷ், தாய், தந்தை, ஆசிரியர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள், போன்ற உறவுகளின் பேராற்றல் குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில், கவுரவ விரிவுரையாளர்கள் கலைவாணி, புவனேஸ்வரி, உதவி பேராசிரியர் சுஜிதா உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மூன்றாம் ஆண்டு மாணவி மோனிஷா நன்றி கூறினார்.