/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பழைய சுப்பிரமணிய சுவாமி கோவில் கொடிமரம் பிரதிஷ்டை
/
பழைய சுப்பிரமணிய சுவாமி கோவில் கொடிமரம் பிரதிஷ்டை
ADDED : மார் 13, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டியில், பழைய சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டும் பணி கடந்த, 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஆனி மாதம் நடக்க உள்ளது. இதையெடுத்து கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை நடந்தது.
முன்னதாக, கோவில் விழாக்குழுவினர் கலசம் எடுத்து வீதி உலா வந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து, கந்த சஷ்டி கவசம் பாடினர். கிரேன் மூலம் புதிய கொடிமரத்தை நட்டனர்.
ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷமிட்டு சுவாமியை வழிபட்னர்.