sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம்

/

பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம்

பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம்

பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம்

3


ADDED : செப் 24, 2025 03:26 AM

Google News

3

ADDED : செப் 24, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''நாட்டிலேயே பயணியர் கட்டணம் வாயிலாக வருமானம் ஈட்டுவதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்களின் எண்ணிக்கையை, 50 சதவீதம் அதிகரிக்க உள்ளோம்,'' என, தெற்கு ரயில்வேயின் பயணியர் பிரிவு தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் கூறினார்.

தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 727 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.



32 கோடி பேர் பயணம்


பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்கம், ரயில் நிலையங்கள் மேம்பாடு, ரயில்களின் வேகம் அதிகரிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, பயணியர் ரயில்களை இயக்குவதிலும், தெற்கு ரயில்வே தொடர்ந்து முழு கவனம் செலுத்தி வருகிறது.

இதனால், பயணியர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, தெற்கு ரயில்வேயில், கடந்த ஏப்., முதல் ஆக., வரை மொத்தம், 32.15 கோடி பேர் பயணித்துள்ளனர்.

இது, இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 6.58 சதவீதம் அதிகம். நாடு முழுதும் ரயில்வேயில் பயணியர் பிரிவில், அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் உள்ளது.

அதாவது, கடந்த ஏப்., முதல் ஆக., வரை, 3,273 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது; அதற்கு முந்தைய ஆண்டை விட, 4.71 சதவீதம் அதிகம்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் அளித்த பேட்டி:


பயணியர் பிரிவை மையமாக வைத்து, தெற்கு ரயில்வே செயல்படுகிறது. பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், அதிநவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மேம்பாடு, கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில்களின் வேகம் அதிக ரிப்பு, முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதன் விளைவாக, கடந்த ஏப்ரல் முதல் ஆக., முதல், 32.15 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக, 3,273.38 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் இருக்கிறது. கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு, ரயில் பாதைகள் அவசியம்.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை, 3, 4வது புதிய பாதைகள், 365.42 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. பெரம்பூர் - அம்பத்துார் இடையே, 5, 6வது கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க உள்ளோம்.

ரூ.2,144 கோடி


தற்போது, முதல் கட்டமாக, 177 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 4வது புதிய ரயில் பாதை, 714 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. சேலம் - திண்டுக்கல் இடையே, 165 கி.மீ., துாரம் இரட்டை பாதை பணிகளும், 2,144 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன.

அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,255 கோடி ரூபாயில், புதிய மற்றும் இரட்டை பாதைகள் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். 650 மின்சார ரயில்கள் உட்பட தினமும், 1,400க்கும் மேற்பட்ட ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இப்பாதை பணிகள் முடியும் நிலையில், 2030ல் தற்போதுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

சென்னை - ராமேஸ்வரம் இடையே 'வந்தே பாரத்'  சென்னை எழும்பூர் - ராமேஸ்வரத்துக்கு, 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை - சென்ட்ரல் வந்தே பாரத் ரயில், 16 பெட்டிகளாக விரைவில் அதிகரிக்கப்படும். இதேபோல், தஞ்சாவூரில் இருந்து மைசூருக்கும், 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்க, வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது  சென்னை பெரம்பூரில் புதிய ரயில் முனையம், 342 கோடி ரூபாயில் அமைக்க, ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறது. 2028ல் பணிகள் முடியும்போது, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்  எழும்பூரில், 734.91 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், 2028ல் முடிக்கப்பட உள்ளன. இதேபோல், தாம்பரம், சென்ட்ரல் ரயில் நிலையங்களை மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. வாரியத்தின் ஒப்புதலுக்கு பின், பணிகளை மேற்கொள்ள, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.








      Dinamalar
      Follow us