/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
யானையை சுட்டு கொன்று தந்தம் திருடிய இருவர் கைது
/
யானையை சுட்டு கொன்று தந்தம் திருடிய இருவர் கைது
ADDED : மார் 19, 2025 01:36 AM
யானையை சுட்டு கொன்று தந்தம் திருடிய இருவர் கைது
பென்னாகரம்:ஏரியூர் அருகே வனத்தில் ஆண் யானையை சுட்டுக்கொன்று, தந்தங்களை திருடிய இருவரை, பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வனச்சரகம், ஏமனுார் வனக்காவல், சிங்காபுரம் அடுத்த கோடுபாய் கிணறு வனப்பகுதியில் கடந்த மார்ச், 1ல், ஆண் யானையை சுட்டுக்கொன்று மர்ம நபர்கள் அதன் தந்தங்களை கடத்தினர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
யானையை சுட்டு கொன்றதாக, தர்மபுரி மாவட்டம், ஏமனுார் அடுத்த கொங்காரப்பட்டியை சேர்ந்த செந்தில், சேலம் மாவட்டம், கோவிந்தப்பாடி புதுாரை சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்த தந்தங்கள், சேலம் மாவட்டம், காரைக்காடு கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அக்கிராமம் சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா காவிரி கரையோர கிராமங்களை சேர்ந்த சிலரிடமும், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.