/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு ரயில் 'வாட்ஸாப்' குழு தொடக்கம்
/
பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு ரயில் 'வாட்ஸாப்' குழு தொடக்கம்
பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு ரயில் 'வாட்ஸாப்' குழு தொடக்கம்
பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு ரயில் 'வாட்ஸாப்' குழு தொடக்கம்
ADDED : ஏப் 02, 2025 01:31 AM
பெண் பயணிகள் பாதுகாப்பிற்கு ரயில் 'வாட்ஸாப்' குழு தொடக்கம்
தர்மபுரி:தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக, சேலம் வட்ட ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் நேற்று, 'வாட்ஸாப்' குழு தொடக்க விழா நடந்தது. இதில், தர்மபுரி பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கவுங்கர் முன்னிலை வகித்தார். இதில், ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணி
களுக்கு ரயில் பயணத்தின் போது, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது, சமூக விரோதிகளிடம் இருந்து ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்வது, தங்களின் விலை உயர்ந்த உடைமைகளை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
மேலும், ரயில் பயணத்தின் போது, பெண் பயணிகளுக்கு பிரச்னை ஏற்பட்டால். 1512, 139, 1091, 1098 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தொடர்ந்து, பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக, 94981 01964 என்ற மொபைல் எண்ணில், 'வாட்ஸாப்' குழு தொடங்கப்பட்டது.