/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின் கம்பங்களில் விளம்பர பலகைகள் அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
/
மின் கம்பங்களில் விளம்பர பலகைகள் அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
மின் கம்பங்களில் விளம்பர பலகைகள் அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
மின் கம்பங்களில் விளம்பர பலகைகள் அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 16, 2025 01:18 AM
மின் கம்பங்களில் விளம்பர பலகைகள் அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
அரூர்:தர்மபுரி மாவட்டத்தில், அனுமதியின்றி பொது இடங்களில் விளம்பர பேனர்கள், விளம்பர தட்டிகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அரூரில், பல இடங்களில் தடையை மீறி, பொது இடங்கள், மின்கம்பங்களில் விளம்பர தட்டிகள் வைப்பது அதிகரித்துள்ளது. அவ்வாறு வைக்கப்படும் விளம்பர பலகைகள் நிகழ்ச்சி முடிந்த பின்பும் அகற்றப்
படுவதில்லை. குறிப்பாக, அரூரில், சேலம், தர்மபுரி, திருப்பத்துார் மற்றும் அரூர் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை மற்றும் தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் மையப்பகுதியில் விளம்பர பலகைகள் அதிகளவில் கட்டப்படுகிறது. மின் கம்பங்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதுடன், பழுது நீக்குவதற்காக மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறுவதற்கு மிகவும் சிரமம்படுகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை இல்லாததால், இது போன்ற விளம்பர தட்டிகள் வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், மின் வாரியம் விளம்பர போர்டுகளை அகற்றவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், விளம்பர தட்டிகள் வைப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.