/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள் விற்பனை தர்மபுரியில் 3 கடைகளுக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்பனை தர்மபுரியில் 3 கடைகளுக்கு 'சீல்'
புகையிலை பொருட்கள் விற்பனை தர்மபுரியில் 3 கடைகளுக்கு 'சீல்'
புகையிலை பொருட்கள் விற்பனை தர்மபுரியில் 3 கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜன 30, 2025 01:29 AM
புகையிலை பொருட்கள் விற்பனை தர்மபுரியில் 3 கடைகளுக்கு 'சீல்'
காரிமங்கலம்:தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, காரிமங்கலம் தாலுகாவில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானுசுஜாதா, தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மற்றும் காரிமங்கலம் போலீசார் அடங்கிய குழுவினர் காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட், கும்பாரஹள்ளி, பைபாஸ் சாலை, அகரம் பிரிவு சாலை மற்றும் மொரப்பூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடை, பேக்கரி, ஓட்டல், பெட்டி கடை மற்றும் டீ கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், காலாவதி குளிர்பானங்கள் குறித்து சோதனை செய்தனர்.
இதில், அகரம் பிரிவு சாலையில் இருந்த டீ கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. சம்மந்தபட்ட கடை உரிமையாளர் ஏற்கெனவே, ஒரு முறை புகையிலை விற்று பிடிபட்ட நிலையில், 2 வது முறையாக விற்பனையில் ஈடுபட்டதால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது கடைக்கு சீல் வைத்தனர். அதேபோல், கரகப்பட்டியில் இரண்டு மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். மேலும், காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்த, 3 கடைகளுக்கு தலா, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.