/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா
/
தர்மபுரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா
ADDED : ஆக 16, 2024 05:21 AM
தர்மபுரி: சுதந்திர தினவிழாவையொட்டி நேற்று, தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கில், கலெக்டர் சாந்தி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த, 240 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், சிறப்பான முறையில் குழுவாக ஒருங்கிணைந்து பணிபுரிந்த, 20 குழுக்களுக்கு கேடயம், 22 பயனாளர்களுக்கு, 69,000 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பென்னாகரம் ஜி.கே.மணி, தர்மபுரி வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். சுதந்திர போராட்ட தியாகிகள் பலர் பங்கேற்றனர்.* பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.துறிஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடந்த சுதந்திர தின விழாவில், பேரூராட்சி தலைவர் மாரி தேசியக்கொடி ஏற்றினார்.* பாப்பிரெட்டிப்பட்டி, பா.ஜ., கிழக்கு மண்டல தலைவர் பிரவீன்குமார் தலைமையில், பஸ் ஸ்டாண்டில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பின், இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடந்தது.* கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அண்ணாமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரூர், கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டப வளாகத்தில், தர்மபுரி கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தலைவர் சந்திரசேகரன் தலைமையில், கேப்டன் சுப்பிரமணி தேசியக்கொடி ஏற்றினார்.

