/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் தொடர் திருட்டுவர்த்தகர்கள் பீதி
/
அரூரில் தொடர் திருட்டுவர்த்தகர்கள் பீதி
ADDED : ஜன 25, 2025 01:48 AM
அரூரில் தொடர் திருட்டுவர்த்தகர்கள் பீதி
அரூர், : தர்மபுரி மாவட்டம், அரூர் நான்குரோட்டில் உள்ள ஒரு காபி கடையில், கடந்த, 20 இரவு கதவை உடைத்து மர்ம நபர்கள் பணம் திருடியுள்ளனர். தொடர்ந்து, சந்தைமேட்டில் உள்ள ஒரு வீட்டில் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர்.
கடந்த, 22ல் இரவு திரு.வி.க., நகரில் உள்ள பேக்கரி மற்றும் இரும்பு கடையில் பக்கவாட்டு கதவை உடைத்து, பணம் திருடியுள்ளனர். மேலும், நான்குரோட்டில் உள்ள மரக்கடையிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அரூர் பெரிய மண்டி தெருவில் சீனிவாசன் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருட்டுச் சம்பவங்கள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. வணிக நிறுவனங்களை குறிவைத்து, ஓரு கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறது.
இதனால், வர்த்தகர்கள் உட்பட அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். எனவே, தொடர் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

