/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அண்ணாதுரை நினைவு நாள் அ.தி.மு.க., அனுசரிப்பு
/
அண்ணாதுரை நினைவு நாள் அ.தி.மு.க., அனுசரிப்பு
ADDED : பிப் 02, 2025 01:30 AM
அண்ணாதுரை நினைவு நாள் அ.தி.மு.க., அனுசரிப்பு
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிக்கப்படுவது குறித்து, மாவட்ட செயலாளரும் பாலக்கோடு எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழக முன்னாள் முதல்-வர் அண்ணாதுரையின், 56-வது நினைவு நாள், நாளை தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி மாவட்ட மற்றும் நகர கழகம் சார்பில், தர்மபுரி நகரில், ஈ.வெ.ரா., சிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று, 4 ரோடு பகுதியிலுள்ள அண்ணாதுரை உருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.