/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்வாரிய ஊழியர்கள்செயற்குழு கூட்டம்
/
மின்வாரிய ஊழியர்கள்செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 07, 2025 01:19 AM
மின்வாரிய ஊழியர்கள்செயற்குழு கூட்டம்
தர்மபுரி, : தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம், தர்மபுரி செங்கொடிபுரத்தில் உள்ள, மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் விஜயன் வேலை அறிக்கை குறித்து பேசினார். இதில், ஓய்வு பெற்றோருக்கு உயிர்வாழ் சான்றிதழை நேரில் சமர்பிக்கும் நடைமுறையை கொண்டு வரவேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில், 54 மருத்துவமனைகள் விடுபட்டுள்ளது. இதை இணைக்க வேண்டும். ஒப்பந்தத்தில் பணியாற்றிய காலத்தை, ஓய்வூதியத்தில் சேர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத்தை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதி படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் சின்னசாமி, மாவட்ட நிர்வாகிகள் குழந்தைசாமி, குப்புசாமி, சித்தேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.

