/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ் வளர்ச்சி துறையின் ஆட்சிமொழி கருத்தரங்கம்
/
தமிழ் வளர்ச்சி துறையின் ஆட்சிமொழி கருத்தரங்கம்
ADDED : பிப் 09, 2025 01:22 AM
தமிழ் வளர்ச்சி துறையின் ஆட்சிமொழி கருத்தரங்கம்
தர்மபுரி,:தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூட்டரங்கில் ஆட்சிமொழி கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமை வகித்தார். இதில், சேலம் மண்டல தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனரும் அலுவலக கண்காணிப்பாளருமான சுகன்யா வரவேற்றார். டி.ஆர்.ஓ., கவிதா முன்னிலை வகித்தார். இதில், பல்வேறு தலைப்புகளில் சேலம் மாவட்ட தமிழ்ச் செம்மல் மற்றும் திரு.வி.க., விருதாளர் முனைவர் கணேசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்துறை துணை பேராசிரியர் தமிழ்பாரதி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி தமிழ் கவுரவ விரிவுரையாளர் முனைவர் பேகம் ஆகியோர், இக்கல்லுாரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில், தமிழகத்தின் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. எனவே, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பமிட வேண்டுமென மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவுறுத்தினார். மேலும், இதில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், அதியமான்கோட்டை அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் அதியமான், பூவல்மடுவு அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ண நாராயணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.