/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேதமான குடியிருப்புக்களை சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமான குடியிருப்புக்களை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 18, 2025 12:45 AM
சேதமான குடியிருப்புக்களை சீரமைக்க வலியுறுத்தல்
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,ல், பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, கடந்த, 1968ல், 9வது- வார்டு கோபாலகிருஷ்ண செட்டியார் நகர சுத்த பணியாளார் காலனியில், 26 ஓட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.
இதில், குடியிருப்பவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை, அவர்களின் சம்பளத்தில் இருந்து, அரசு பிடித்தம் செய்து வருகிறது. இந்நிலையில், வீடுகள் கட்டப்பட்டு, 56 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், கூரைக்கு பயன்படுத்திய மரங்கள் உடைந்தும், சுவர்கள் விரிசல் அடைந்த நிலையிலும் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் வீடுகளுக்குள் புகும் நீரால், துாய்மை பணியாளர்கள் அவதியடைகின்றனர். கூரையிலுள்ள ஓடுகள் உடைந்துள்ளதால், சிமென்ட் கலவையை பூசியும், விளம்பர பேனர்களை போர்த்தியும் உள்ளனர்.
கடந்த, 2016 ஜூலை 30ல், துாய்மை பணியாளர்களுக்கு, புதிதாக குடியிருப்புகள் கட்டுவது குறித்து, அப்போதைய சேலம் குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ஜெயந்தி மாலா ஆய்வு செய்தார். ஆனால், இதுவரை எந்த பணிகளும் துவங்கப்படவில்லை. எனவே, சேதமடைந்துள்ள குடியிருப்புக்களை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க, துாய்மை பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.