/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புதெரிவித்து தர்ணா போராட்டம்
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புதெரிவித்து தர்ணா போராட்டம்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புதெரிவித்து தர்ணா போராட்டம்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புதெரிவித்து தர்ணா போராட்டம்
ADDED : பிப் 18, 2025 12:47 AM
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புதெரிவித்து தர்ணா போராட்டம்
சேலம்:டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரிய கல்வராயன் மலை அருகே, கீழ்நாடு குன்னுாரை சேர்ந்த, 30 பேர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், நான்கு பேர் மட்டும் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள், பழங்குடியினர் அதிகம் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது, மருத்துவமனை இல்லை, பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதி எதுவும் இல்லாத நிலையில், சில மாதங்களுக்கு முன் அரசு அதிகாரிகள், இங்கு வந்து மதுக்கடை அமைக்க இடம் தேர்வு செய்து, அதற்கான பணிகளில் துரிதமாக செயல்பட்டு வந்தனர். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபை கூட்டத்திலும், கலெக்டரை சந்தித்தும் இதுவரை, 17 மனு வழங்கி
யுள்ளோம். இங்கு அடிப்படை வசதிகளே இல்லை; டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது; மீறி அமைத்தால் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தோம். டாஸ்மாக் கடைக்கு அவசரம் காட்ட வேண்டாம்.இவ்வாறு கூறினர்.