/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவில் நிலத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு
/
கோவில் நிலத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு
ADDED : பிப் 26, 2025 01:19 AM
கோவில் நிலத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு
ஓசூர்:ஓசூர் பழைய பெங்களூரு சாலையில், சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 18 சென்ட் நிலம் உள்ளது. இதன் வழியாக, ராஜகால்வாய் செல்கிறது. அது போக மீதமுள்ள, 10.50 சென்ட் நிலத்தை, 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு ஏலம் விட, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதற்காக, ஓசூர் தேர்ப்பேட்டையிலுள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் டெண்டர் பெட்டி வைக்கப்பட்டது.
கோவில் செயல் அலுவலர் சின்னசாமி, ஆய்வாளர் சக்தி தலைமையில், நிலத்தை ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்தன. 10.50 சென்ட் நிலத்திற்கு, மாத வாடகையாக குறைந்தபட்சம், ஒரு லட்சத்து, 628 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. நிலத்தை ஏலம் எடுக்கும் நபர், 12 மாத வாடகையை முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஏல தொகையில் இருந்து கூடுதலாக, 5 சதவீதம் கட்ட, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருந்தது.
இதற்கிடையே, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் தலைவர் நாகராஜ் ஆகியோர் தலைமையில், அகில இந்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் உட்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திரண்டு, ஏலத்தை தடுத்து, அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோவில் நிலத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது. அந்த நிலத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கட்ட போகிறோம் எனக்கூறினர். உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக, ஏலத்தில் பங்கேற்ற ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.