/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டிரைவர் மீது தாக்குஇருவர் அதிரடி கைது
/
டிரைவர் மீது தாக்குஇருவர் அதிரடி கைது
ADDED : மார் 02, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிரைவர் மீது தாக்குஇருவர் அதிரடி கைது
ஓசூர்:சூளகிரி அடுத்த அத்திமுகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 34, டிரைவர். இவர் கடந்த, 27-ல், ஏ.செட்டிப்பள்ளி சர்க்கிள் அருகே பேரிகை-சூளகிரி சாலையில் சென்றுள்ளார்.
அப்போது அவரின் தம்பி பிரபாகரன், அத்திமுகத்தை சேர்ந்த டிரைவர் லோகேஷ், 32, ஏ.செட்டிப்பள்ளியை சேர்ந்த கார்பென்டர் வெங்கடேஷ், 34, இருவருடனும் நின்று பேசியுள்ளார். இதை பார்த்த ஸ்ரீதர், பிரபாகரனிடம் அவர்களுடன் சேர்ந்து பழகாதே எனக் கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த இருவரும் ஸ்ரீதரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகார்படி, பேரிகை போலீசார் விசாரித்து லோகேஷ், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர்.