/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சனத்குமார் ஆறு துார்வாரும்பணியை கலெக்டர் ஆய்வு
/
சனத்குமார் ஆறு துார்வாரும்பணியை கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 02, 2025 01:45 AM
சனத்குமார் ஆறு துார்வாரும்பணியை கலெக்டர் ஆய்வு
தர்மபுரி:தர்மபுரி டவுன், அன்னசாகரம் செல்லும் வழியில் சனத்குமார் ஆற்றில் துார்வாரும் பணிகளை கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்தார்.
சனத்குமார் ஆற்றை தூர்வாரி, துாய்மைப்படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னசாகரம் செல்லும் வழியில் உள்ள, சனத்குமார் ஆறு துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் சதீஸ் நேரில் பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், 'சனத்குமார் ஆற்றை பாதுகாப்பது நமது கடமை என்றும், பொதுமக்கள் ஆறு ஓடும் பகுதிகளில் குப்பை, கழிவுகள் கொட்டுவதை தவிர்த்து பாதுகாக்க வேண்டும்' என்றார்.
தர்மபுரி நகராட்சி சேர்மன் லட்சுமி, நகரமன்ற துணை சேர்மன் நித்யா, நகராட்சி கமிஷனர் சேகர், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.