ADDED : மார் 06, 2025 01:19 AM
பயன்பாட்டிற்கு வந்த நிழற்கூடம்
கடத்துார்:தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்விளக்கு, 'சிசிடிவி' கேமரா, மின்விசிறி, இருக்கைகள் என நவீன வசதிகளுடன் நிழற்கூடம் கட்டப்பட்டது.
சிலரின் ஆக்கிரமிப்பால், மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு திறக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் மழை, வெயில் காலங்களில் மக்கள் சாலைகளில் நின்று பஸ் ஏறும் நிலை இருந்து வந்தது. இது குறித்து நேற்று முன்தினம் நம், 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி, படம் வெளியானது.
இதையடுத்து கலெக்டர் சதீஷ் உத்தரவின் படி, கடத்துார் பி.டி.ஓ., கலைச்செல்வி ஆய்வு செய்து, நிழற் கூடம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை அகற்றியும், நிழற்கூடத்தில் கட்டில் போட்டு படுத்திந்தவர்களை அப்புறப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு நிழற்கூடத்தை கொண்டு வந்தார். இதனால்
பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.