ADDED : மார் 08, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகளிர் தின விழா கொண்டாட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பி.டி.ஓ., செல்வன் தலைமை வகித்தார். பி.டி.ஓ., ஜோதி கணேஷ், ஒன்றிய பொறியாளர்கள் திலீபன், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி வரவேற்றார்.
ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.
துணை பி.டி.ஓ., க்கள் இளையராஜா, ரமணி, சஞ்சீவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி நன்றி கூறினார். இதேபோன்று கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., கலைச்செல்வி தலைமையில் விழா நடந்தது.