தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு விசாரணை துவக்கம்

அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு விசாரணை துவக்கம்

அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு விசாரணை துவக்கம்


ADDED : மார் 19, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு விசாரணை துவக்கம்

தர்மபுரி:தர்மபுரியை சேர்ந்த, அ.தி.மு.க., மாணவரணி நிர்வாகி வீரமணி, 38. கடந்த, 2009-ம் ஆண்டு நவ., 24 அன்று தர்மபுரி, அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் கலந்து கொண்டார். அப்போது, ஏற்பட்ட தகராறின்போது நடந்த தாக்குதலில் வீரமணி படுகாயமடைந்து இறந்தார். இது குறித்து, தர்மபுரி டவுன் போலீசார், 31 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணையை விரைவு படுத்த, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமகள் விசாரணை நடத்தினார். அரசு தரப்பில் வக்கீல் முருகன் ஆஜரானார். இந்த வழக்கில், சாட்சிகள் விசாரணை இன்றும் தொடர்ந்து நடக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us