தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இறந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பால் பரபரப்பு

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பால் பரபரப்பு

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பால் பரபரப்பு


ADDED : மார் 23, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இறந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பால் பரபரப்பு

பாப்பிரெட்டிப்பட்டி:--கடத்துார் அடுத்த அஸ்திகிரி கோம்பையை சேர்ந்தவர் கார்த்திக், 36. நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் உடலை அடக்கம் செய்ய, அப்பகுதி சுடுகாட்டிற்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்.

வழக்கமான பாதையில் தடுப்பணை தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மாற்றுப்பாதையில் எடுத்து சென்றனர். இதற்கு, அப்பகுதியை சேர்ந்த மாது என்பவர், தன் பட்டா நிலம் வழியாக உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஊர்மக்களுக்கும், மாதுவிற்கும் ஏற்பட்ட வாக்கு

வாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. புகார் படி, கடத்துார் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடல் எடுத்துச் செல்லப்படும் வழி, ஓடை புறம்போக்கு நிலம். பட்டா இடத்தில் எடுத்துச் செல்லவில்லை என கூறியதால், அதன்பின் உடல் எடுத்து செல்லப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us