/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் பஸ் ஸ்டாண்டில் எல்லை மீறும் காதலர்கள்
/
அரூர் பஸ் ஸ்டாண்டில் எல்லை மீறும் காதலர்கள்
ADDED : ஏப் 08, 2025 01:57 AM
அரூர் பஸ் ஸ்டாண்டில் எல்லை மீறும் காதலர்கள்
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, தங்களது ஊர்களுக்கு செல்ல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் தினமும், பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.
மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களில் சில காதல் ஜோடிகள், பஸ் ஸ்டாண்டில், பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என, ஏராளமானோர் நடந்து, கடந்து செல்ல கூடிய பாதைகளில் காதல் லீலை செய்கின்றனர்.
வெளிப்படையாக முத்தம் கொடுப்பது உள்ளிட்ட முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்கின்றனர். காதலர்கள் என்ற பெயரில் நெருக்கமாக அமர்ந்து படிப்பது போல் மணிக்கணக்கில் பேசுவதுடன், ஒருவரையொருவர் சீண்டி விளையாடுகின்றனர்.
குழந்தைகள், முதியோர் அருகில் இருந்தாலும் அவர்கள் தயக்கம் இன்றி செயல்படுகின்றனர். ஒரு சில காதல் ஜோடிகளின் எல்லைமீறிய செயல்களால் இங்கு வரும் பொதுமக்கள் அதிர்சியில் உள்ளனர்.
இது தொடர்கதையாக இருந்து வருவதால், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

