/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போக்குவரத்து போலீசார் சோர்வின்றிபணியாற்ற பழச்சாறு வழங்கிய எஸ்.பி.,
/
போக்குவரத்து போலீசார் சோர்வின்றிபணியாற்ற பழச்சாறு வழங்கிய எஸ்.பி.,
போக்குவரத்து போலீசார் சோர்வின்றிபணியாற்ற பழச்சாறு வழங்கிய எஸ்.பி.,
போக்குவரத்து போலீசார் சோர்வின்றிபணியாற்ற பழச்சாறு வழங்கிய எஸ்.பி.,
ADDED : ஏப் 09, 2025 01:26 AM
போக்குவரத்து போலீசார் சோர்வின்றிபணியாற்ற பழச்சாறு வழங்கிய எஸ்.பி.,
தர்மபுரி:தர்மபுரியில் போக்குவரத்து போலீசார் சோர்வின்றி பணியாற்ற நீர்மோர், தர்பூசணி, பழச்சாறு, குளிர்பானம் உள்ளிட்டவற்றை மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் நேற்று வழங்கினார்.
தர்மபுரி மாவட்டத்தில் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மதிய
வேளைகளில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். இதில், தர்புரியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீசார் கடுமையான வெப்பத்தினால் தவித்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து மீண்டு, சோர்வின்றி பணியாற்ற, போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் அவ்வப்போது நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி, குளிர்பானங்களை வழங்கும் வகையில், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், நேற்று தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு அவற்றை வழங்கினார். மேலும், பணியின் போது வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துகொள்ள தொப்பி, கூலிங் கிளாஸ் ஆகியவற்றையும் வழங்கினார்.
இதில், தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன், டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன், டிரா பிக் எஸ்.ஐ.,க்கள்  சரவணன், கோமதி உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.