ADDED : ஏப் 09, 2025 01:27 AM
அ நிறம் | அளவு
பி.டி.ஓ., ஆபீஸ் முன் தேங்கி நிற்கும் கழிவுநீர்
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில், 32 பஞ்., உள்ளது. இதில், அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணி
களுக்காக, பஞ்., அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் முன்புள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அங்குள்ள பி.டி.ஓ., அலுவலகம், வேளாண் துறை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, அலுவலகம் முன் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க, அப்
பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
