/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கல்லுாரியில் சமூகவியல்பாடம் நடத்த பேராசிரியர் இல்லை
/
அரசு கல்லுாரியில் சமூகவியல்பாடம் நடத்த பேராசிரியர் இல்லை
அரசு கல்லுாரியில் சமூகவியல்பாடம் நடத்த பேராசிரியர் இல்லை
அரசு கல்லுாரியில் சமூகவியல்பாடம் நடத்த பேராசிரியர் இல்லை
ADDED : ஏப் 10, 2025 01:48 AM
அரசு கல்லுாரியில் சமூகவியல்பாடம் நடத்த பேராசிரியர் இல்லை
பாப்பிரெட்டிப்பட்டி:--தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில், அரசு கலைக்கல்லுாரி, 2011ல் பெரியார் பல்கலைக்கழக கல்லுாரியாக தொடங்கப்பட்டது. பின், 2020ல் அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டது. இதில் இளங்கலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல் கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட, 7 பாடபிரிவுகளும், முதுகலையில், 3 பாடப்பிரிவுகள் மற்றும் பி.எச்.டி., பாடப்பிரிவுகளும் உள்ளன. இதில், தர்மபுரி மட்டுமல்லாது திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மொத்தம், 824 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். முதல்வர் உட்பட, 15 நிரந்தர பேராசிரியர்கள், 30 கவுரவ விரிவுரையாளர்கள், 10 அலுவலக பணியாளர்கள் என, 55 பேர் பணியாற்றுகின்றனர்.
இக்கல்லுாரியில், 2020ல் ஆரம்பிக்கப்பட்ட இளங்கலை சமூகவியல் பாடப்பிரிவில் தற்போது மொத்தம், 110 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பாடப்பிரிவுக்கு இதுவரை அரசு சார்பில் பேராசிரியரோ, உதவி பேராசிரியர்களோ நியமிக்கப்படவில்லை. கடந்த, 5 ஆண்டாக, தமிழ் துறையை சேர்ந்த பேராசிரியர் செந்தில்குமார், துறைத்தலைவராக இருந்து கவனித்து வருகிறார். பிறத்துறை பேராசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இதனால் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இப்பிரிவில் ஒவ்வோர் ஆண்டும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
இது குறித்து, கல்லுாரி முதல்வர் ரவி கூறுகையில், ''பெரியார் பல்கலை கல்லுாரியாக இருந்தபோது, அக்கல்லுாரி சமூகவியல் பாடப்பிரிவிற்கு, பல்கலையில் இருந்து வந்து பாடம் எடுத்தனர். அரசு கல்லுாரியாக மாறிய பிறகு, அரசு மற்றும் பி.டி.ஏ., மூலம் தலா ஒரு கவுரவ விரிவுரையாளர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வரும் கல்வியாண்டில் நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கப் படுவர். அனைத்து அரசு கல்லுாரிகளிலுமே, 70 சதவீதம் கவுரவ விரிவுரையாளர்கள் தான் பணிபுரிகின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்
படாது,'' என்றார்.